Saturday, July 31, 2010

நண்பர்கள் தினம்

நண்பன் என்றால்
ல்லதையே
ண்ணி
ழகிடும்
ன்பு
இன்று உலகில் பல நண்பர்களை காண முடிகிறது . இன்றைய வாழ்வில் விரும்பியோ விரும்பாமலோ எல்லோரும் பாவிக்கிற ஓர் ஊடகம் முகப் புத்தகம் (facebook) இது கூட இரு நண்பர்களின் ஒரு முயற்சியே, கூகுளே(google) கூட இரு நண்பர்கள் ஆரம்பித்த ஒரு செயற்திட்டம். இவ்வாறாக பல நல்ல நண்பர்கள் மூலமாக நல்ல பல பலன்களை உலகம் கூட அனுபவிக்கின்றது

இன்று எதற்காக நாம் நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம்? அன்று மட்டும் தான் நாம் நண்பர்களை நினைக்க வேண்டுமா? என்று என்னிடம் ஒரு நண்பன் கேட்கிறான், அதாவது ஒவ்வொரு நாளும் உணவு உண்கிறோம் எப்போதாவது ஹோட்டல் ஒன்றிக்கு போய் எமக்கு மிகவும் பிடித்த உணவை உண்கிறோம். பிடித்த உணவு என்பதற்காக ஒவ்வொருநாளும் அதையே உண்டுவந்தால் சலிப்பு ஏற்படும் அதைதான் பழக பழக பாலும் புளிக்கும் என்பது. நண்பர்கள் தினம் மட்டுமல்ல அன்னையர் தினமாகட்டும் தந்தையர் தினமாகட்டும் காதலர் தினமாகட்டும் ஒரு குறிபிட்ட திகதியில் அன்று உங்கள் உறவை வலுப்படுத்துகின்ற ஒரு நாளாக கொண்டப்பட்டு வருகின்றது. இதையே ஒரு சிலர் தங்கள் காதலை சொன்ன நாளை காதலர் தினமாக கொண்டாடுவது போல உங்கள் நண்பனை சந்தித்த நாளை நண்பர்கள் தினமாக கொண்டாட முடியும். அதற்காக அன்று மட்டும் தான் நண்பனை நினைப்பது என்றோ புகழுவது என்றோ பொருள் இல்லை. அதாவது உங்கள் நட்பின் அன்பு வெளிப்பாட்டை அல்லது உங்கள் நட்டபின் வளர்ச்சி பாதையை மீட்டி பார்க்கிற மற்றவரோடும் பகிர்ந்து மகிழுகின்ற ஒரு நாள்.

பெயர் குறிப்பிட விரும்பாத இரு நண்பர்களின் கதை ஒன்று

"ஓ நண்பனே..! நம் நட்பின் வரலாறை சற்றே சற்றே மீட்டி பார்க்கிறேன்
உனக்கு இவை பற்றி சிந்திக்க ஏது நேரம் ? என்பதை எண்ணி என் நினைவுகளை அனுப்பி வைக்கிறேன் நேரம் வரும் போது வாசித்து பார்..!
ஒரே வகுப்பறையில் அருகருகே முதல் சந்திப்பு, அங்கே நம் நிலை பகிர்ந்தோம், உன் கண்ணீர் கண்டு நிலை குலைந்த நான் அன்றே என் நிலை மறந்து, உனக்காக வாழ உறுதி கொண்டேன்.
அன்று முதல் இருவரும் இன்ப துன்பம் இரண்டையும் பகிர்ந்தோம் ஒரு தாய் பிள்ளை போல் சகோதரனை போல் வாழ்ந்திட்ட வாழ்வு.....!
எனக்காய் என் கண்கள் அழுததை விடவும் உனக்காய் கசிந்த நாட்கள் அதிகம் என்பது நீயே அறிந்த உண்மை.
எனக்காய் நான் தொழுத நாட்களிலும் உனக்காய் வணங்கிய நாட்களின் கணக்கு நான் தொழும் தெய்வத்துக்கு மட்டுமே தெரிந்த உண்மை
உனக்கு சற்றே தலை வலித்தாலும்,அதிகாலையிலும் முகம் கூட அலசாமல் முதல் ஆளாய் உன் வீட்டு வாசலில் நின்ற நாட்கள் உனக்கே தெரிந்தவை,
நீயும் என்னை போலவே இருந்தாயே..! என்னை கேட்காமல் எதையும் செய்ய மாட்டாய்,

இப்படியாய் எப்படியோ இருந்து விட்ட பிறகும், நானே இவற்றை எல்லாம் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியசாலியாக இருக்கிறேன்.
இன்று திடீரென உன் கண்களை மறைத்தது என்ன ? எதனால் மாறினாய்
ஆனாலும் இந்த கடந்த கால வாழ்வில் இருந்து இன்று வரை பல கருத்து முறன்பாடுகள் இருந்தாலும் சகித்து கொண்டவன் திடிரென இவன் ஏன் இப்படி கோபித்து கொள்கிறான் என்று நீ நினைப்பது புரிந்ததால்தான் எழுதுகிறேன்
கடந்த சில வருடங்களாய் உனது சில நடவடிக்கைகளால் சில சமயங்களில் மனதளவில் பாதிக்க பட்டிருக்கிறேன் , வருத்தப்பட்டிருக்கிறேன் சில சமயங்களில் எமது நட்பின் நிலைக்காக சில சம்பவங்களையும் சகித்துகொண்டிருக்கிறேன், எல்லாவற்றுக்கும் ஏதோவொரு +(நேர்) காரணத்தை எனகுள்ளேயே உருவாக்கிக்கொண்டு நட்புக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.
இவை எல்லாம் கடந்தும் நண்பன் என்ற உரிமையோடு என் கனவு ஒன்றை நனவாக்கும் உதவி கோரிய போதும், நீ என்னக்கு அளித்த வாக்குறுதியினை மீறிவிட்டாய், ஒரு நண்பனால் தனது கனவுகளை இழந்த முதல் நபர் நானாகத்தான் இருக்க முடியும்
ஆனாலும், உனக்கு நான் என்றும் இருக்கிறேன். உனக்கு உதவி செய்வதற்கு முதலில் வரும் ஆள் இனியும் எப்போதும் நான் தான். இதுவே எனது நட்பும் நட்பின் நியதியும்"

மேற்குறித்த கதையிலும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சாடி கொள்கிறார்களே தவிர அங்கேயும் நட்பு என்பது இன்னும் மாறாது இருக்கிறது அங்கே தான் நாம் கொண்டாட வேண்டிய நண்பர்கள் தினம் நிலைத்து நிற்கின்றது.

நன்றிகளோடு
நண்பன்
- ராஜயுகன் -
பிற்குறிப்பு : நண்பன் என்பது நண்பிக்கும் பொருந்தும்